பழமொழி.....

Wednesday, July 13, 2011

Prototype. (புரோட்டோ டைப்)


பறக்கும் தட்டு விமானங்களைப் போல புதுவகையான விமானங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு புரோட்டோ டைப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப் புதியவகை விமானங்கள் பாரிய இயந்திரங்களால் இயக்கப்படும் மற்றும் எரிபொருட்களைப் பாவிக்கும் சாதாரண விமானங்களை விட மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.



புதியவையான இவ் விமானங்கள் ஒருவகை காற்றால் நிரப்பப்பட்ட சுவர்களைக் கொண்டதால் புவியீர்ப்பு சக்தியில் இருந்து இவை இலகுவாக மிதக்கும் தன்மை கொண்டவையாக அமைகின்றது. எனவே அதனை ஒருபாதையில் செலுத்த மட்டும் சிறியவகை எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது.

இப் புதியவகை விமானங்கள் இலகுவாகப் பறப்பதாலும், செலவுகள் குறைவு என்பதாலும் இவற்றிக்கு அதிக கிராக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 இந்தக் காணோளிகளைப் பாருங்கள்...


Tuesday, July 12, 2011

Solar Eagle. (சோலார் ஈகிள்)


ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள் ளது. சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது.
சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள் பறக்குமாம். இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு  இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும். முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சோலார் ஈகிள் மேல் எழும்புவதும், தரை இறங்குவதும் காணொளியில்.....



Monday, July 11, 2011

புதிய உளவு வானூர்தி




ஆயுதத் தளபாட தயாரிப்பு (தனியார்) நிறுவனமான Northrop Grumman, புதிய உளவு விமானம் ஒன்றை அமெரிக்க ராணுவத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது ஒரேயொரு விமானம் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் இதை வாங்கச் சம்மதிக்கும் பட்சத்தில் மேலதிக விமானங்கள் தயாரிக்கப்படும் என்கிறது Northrop Grumman.

ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கும் உளவு விமானங்களுக்கும், இந்தப் புதிய விமானத்துக்கும் இடையே என்ன வித்தியாசம்?
இதை ஆளில்லாத உளவு விமானமாகவும் பயன்படுத்தலாம், அதேநேரத்தில் ஒரு விமானியும் செலுத்திச் செல்லலாம். இப்படி இரு வகையிலும் பயன்படுத்தப்படக்கூடிய விமானங்கள் ஏதும் தற்போது பாவனையில் இல்லை.

அத்துடன் இந்த விமானம் பறக்கும்போது, நான்கு ஹைடெக் (Hi-Def) சென்சார்கள் ஒரே நேரத்தில் இயங்கும் (தற்போது பாவனையிலுள்ள உளவு விமானங்களில் அதிகபட்சம் 2 ஹெடெக் சென்சார்களே உள்ளன) அது மாத்திரமல்ல, விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே கீழே தரையில் நடைபெறும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும் முடியும்.

அமெரிக்க ராணுவத்துக்கு நீண்ட காலமாக யுத்த தளவாடங்களை சப்ளை செய்யும் நிறுவனம் இந்த Northrop Grumman. இதனால் இவர்கள் தமது விமானத்தை அமெரிக்க ராணுவத்துக்கு விற்பதில் அதிக சிரமம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.


         இந்தக் காணோளிகளைப் பாருங்கள்.....




Sunday, July 10, 2011

உளவு குருவி...



பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது. 


நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும்.
 
இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.
இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும். சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




  இந்த காணோளியைப் பாருங்கள்.....

Saturday, July 9, 2011

Stealth மாயாவி வானூர்தி



ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு.
இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது.



இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.


ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம்.
ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர்.
இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும்.


இது விரைவில் ஸ்ரீலங்காவின் அம்பாந்தோட்டை வீரவில வானூர்தி நிலையத்திற்கும் வந்து போகலாம். அங்கிருந்தும் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம்.


இந்த காணோளியைப் பாருங்கள்.....


வெளியாகியுள்ளன.

Friday, July 8, 2011

லேசர் பீரங்கி..



லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் சோதனையில் அமெரிக்கா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்க, இலக்கை தாக்குவதற்கு மட்டுமே இதுவரை லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது முதல் முறையாக எதிரிகளின் படகுகளை செயல் இழக்கச் செய்யும், லேசர் பீரங்கியை அமெரிக்கா சோதனை செய்துள்ளது






இந்த சோதனை அமெரிக்காவின் கலபோர்னிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்ட பீரங்கியிலிருந்து சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள் வெளிப்படும். இது எதிரி படகின் இன்ஜினை தீப்பிடிக்க வைத்து செயல் இழக்கச் செய்து விடும் திறன் கொண்டது. அமெரிக்க கடற்படை லேசர் பீரங்கியை சோதனை செய்தது இதுவே முதல் முறை.

நிலப் பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்ட லேசர் ஆயுதங்கள், கடல் பகுதியில் சோதித்தபோது, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடல் காற்றில் உள்ள ஈரப்பதம் லேசர் சக்தியை குறைத்தது. அதனால் அதிக சக்தி வாய்ந்த லேசர்களை பயன்படுத்தி தற்போது நவீன பீரங்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனை வெற்றியா, தோல்வியா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. 




Thursday, July 7, 2011

புதுவகை லேசர் தொழினுட்பம்..

       அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.

      இதை அந்த விமானத்தில் பணிபுரியும் பொறியியலாளரால் தாக்க வரும் ஏவுகணையின் தரவுகள் கணிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவியினால் அலைகள் பாய்ச்சப்பட்டு அதை தகர்க்கலாம். 
      இது தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் என்று கூறபடுகிறது.

இந்த காணோளியைப் பாருங்கள்......