பழமொழி.....

Monday, July 11, 2011

புதிய உளவு வானூர்தி




ஆயுதத் தளபாட தயாரிப்பு (தனியார்) நிறுவனமான Northrop Grumman, புதிய உளவு விமானம் ஒன்றை அமெரிக்க ராணுவத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது ஒரேயொரு விமானம் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் இதை வாங்கச் சம்மதிக்கும் பட்சத்தில் மேலதிக விமானங்கள் தயாரிக்கப்படும் என்கிறது Northrop Grumman.

ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கும் உளவு விமானங்களுக்கும், இந்தப் புதிய விமானத்துக்கும் இடையே என்ன வித்தியாசம்?
இதை ஆளில்லாத உளவு விமானமாகவும் பயன்படுத்தலாம், அதேநேரத்தில் ஒரு விமானியும் செலுத்திச் செல்லலாம். இப்படி இரு வகையிலும் பயன்படுத்தப்படக்கூடிய விமானங்கள் ஏதும் தற்போது பாவனையில் இல்லை.

அத்துடன் இந்த விமானம் பறக்கும்போது, நான்கு ஹைடெக் (Hi-Def) சென்சார்கள் ஒரே நேரத்தில் இயங்கும் (தற்போது பாவனையிலுள்ள உளவு விமானங்களில் அதிகபட்சம் 2 ஹெடெக் சென்சார்களே உள்ளன) அது மாத்திரமல்ல, விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே கீழே தரையில் நடைபெறும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும் முடியும்.

அமெரிக்க ராணுவத்துக்கு நீண்ட காலமாக யுத்த தளவாடங்களை சப்ளை செய்யும் நிறுவனம் இந்த Northrop Grumman. இதனால் இவர்கள் தமது விமானத்தை அமெரிக்க ராணுவத்துக்கு விற்பதில் அதிக சிரமம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.


         இந்தக் காணோளிகளைப் பாருங்கள்.....




No comments: