பழமொழி.....

Friday, July 22, 2011

மகிழுந்து விண்ணில் பறக்க முடியுமா?



புதுவிதமான பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார். இந்த கார் விண்ணில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் கார் திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இது 2 இருக்கைகள் மட்டுமே கொண்டது. மிகவும் எடை குறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 800 கி.மீட்டர் தூரம் செல்ல செலவாகும் எரிபொருள் நிரப்பும் டேங்கு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் விரியும். அதே நேரத்தில் ரோட்டில் இறங்கி கார் ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங்களாக வடிவம் பெறும். இந்த நிகழ்வு 15 வினாடிகளில் நடைபெறும்.
ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.
இதை ஓட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும். புதுவகையான இக்கார்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க ரோடுகளில் ஓடுவதை காணமுடியும்
இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.        
இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.


No comments: