பழமொழி.....

Sunday, July 24, 2011

காற்றின் அழுத்தமும் அடர்த்தியும்..


காற்றின் குணங்கள்..
1. காற்றழுத்தம் (Pressure)
2. காற்றின் அடர்த்தி (Air density)
3. காற்றி வெப்பம்( Air Temperature)
4. காற்றின் வேகம்(Wind Speed)
5. காற்றின் ஆற்றல்(Entropy)
இதில் விமான பயணத்தில் காற்றி அழுத்தம் மட்டுமே நம்மை நேரடியாகவும், மற்றவை விமானத்தின் இயக்கத்தையும் பாதிக்கும்.
                                 காற்றழுத்தம் (Pressure)

 கடல் மட்டத்தில் காற்றி அழுத்தம்
101.3 Kilo Newton Force
1013.25 mili Bar pressure (mb)
14.7 Inches of Hg (Mercury)
760 Millimeters of Mercury (mm Hg) அதில் O
2 அழுத்தம் மட்டும் 160 mm Hg
33.9 feet water pressure
29.92 Pounds per squire Inches of mercury
இருக்கும் ஆனால் நாம் உயர போக போக அது குறைந்து கொண்டே வரும்.
10,000 அடி உயரத்தில் 523 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 105 mm Hg
20,000 அடி உயரத்தில் 349 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 70 mm Hg
30,000 அடி உயரத்தில் 225 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 45 mm Hg
40,000 அடி உயரத்தில் 141 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 29 mm Hg
இதில் காற்றழுத்தம் நம்மை இரண்டு விதமாக பாதிக்கும், உடலுக்கு வெளியே அழுத்தம் குறையும் போது நம் உடலில் உள்ள திரவத்தில் இருக்கும் காற்று வெளிவர ஆரம்பிக்கும் ( அதாவது குறைந்த அழுத்ததினால் நம் ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்) இது 25, 000 அடிக்கு மேல்தான் ஆரம்பிக்கும் அதன் பெயர் எபுலிஸம் லெவல். (Ebulisam Level)
இரண்டாவதாக காற்றில் உள்ள ஆக்ஸிசன் குறைவதால் மயக்கம் ஏற்படும், மனிதனால் 10,000 அடிக்கு மேல்தான் இது ஆரம்பிக்கும் 25,000 அடிக்கு மேல் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அழுத்தம் மிக குறைவு அதனால் மனிதன் மயக்கம் அடைந்து விடுவான்.
அதனால் விமானத்தின் உள் இருக்கும் அழுத்த்தை செயற்கை முறையில் 8,000 அடியில் இருக்குமாறு கண்ணி மூலம் கட்டுபடுத்துவார்கள்.
                        
                   காற்றின் அடர்த்தி (Air Density)

காற்றின் அடர்த்தி (Air Density) விமான இயக்கத்தை இருவிதமாக பாதிக்கும். ஒன்று அடர்த்தி குறைந்தால் இயந்திரத்தின் (Engine) உருவாகும் வலு (power) குறையும், அதனால் தேவையான வலு (power) கிடைக்காது, Take off சமயத்தில் விபத்து ஏற்படலாம். இரண்டாவது விமானத்தின் உயரம் காட்டும் கருவி உண்மையான உயரத்தை விட அதிகமாக காட்டும், அதனாலும் விபத்து ஏற்படலாம். உ.ம்.
ஒரு மலையின் உயரம் 8,000 அடிகள். அதை கடக்க விமானம் குறைந்த பட்சம் 10,000 (2,000 அதிகமாக) கடக்க வேண்டும் என் வைத்துக் கொள்வோம். காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்து இருக்கும் போது விமானம் 7,000 அடிகள் இருக்கும் போதே உயரம் காட்டும் கருவி 10,000 அடி என்று காட்டும். அப்படி என்றால் அந்த விமானம் மலையை கடக்கும் போது மலையில் மோதி விபத்துக்குள்ளாகும்.
அதற்கு விமான பயிற்சியின் போது சரியான பயிற்சி முறைகள் சொல்லி தருவார்கள், அப்படி இருந்தும் சில விபத்துகள் நடந்து இருக்கிறது.
காற்றின் வெப்பம்: அதிகரித்தால் காற்றின் அடர்த்தி குறையும், மேலே கூறிய அனைத்தும் விளைய வாய்ப்புகள் உண்டு.
காற்றின் வேகம்: Take Off, Landing எப்போதுமே எதிர்காற்றில்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் விமான தரையில் ஓடும் தூரம் குறையும். அதே போல் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் காற்று இருந்தாலும் விமானம் பறக்க அனுமதி இல்லை.





1 comment:

Anonymous said...

நன்றாக இருக்கிறது............