இருபது வருடங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பைச்சேர்ந்த நிபுணர்கள் நட்சத்திரப் போர்குறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். நட்சத்திரப் போர்முறையிர் அடிப்படை, சீரொளிக் கதிர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளைத் தாக்கியளிப்பதாகும்.
இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், சீரொளிக் கதிர்களை வேறுபல தேவைகளுக்குப் பயன்படுத்தவல்ல வழிமுறைகள் காணப்படுவதைக் கண்டறிந்தனர். அவ்வழிமுறைகளில் ஒன்றே சீரொளி உந்துவிசையாகும் (Laser propulsion). அதாவது, சீரொளிக் கதிர்கள் மூலம் உந்துகணைகளுக்கான (rockets) உந்துசக்தியினை வழங்குவதாகும்.
தற்போது விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் உந்துகணைகளில்ப ொருமளவான திண்ம மற்றும் திரவ எரிபொருட்கள் பணன்படுத்தப்படுகின்றது. உந்துகணையின் மொத்த நிறையின் பொரும்பகுதி இந்த எரிபொருட்களின் நிறையாகவே காணப்படுகின்றது. எனவே, சீரொளிக் கதிர் மூலம் உந்துகணைக்கான உந்துவிசையினை வழங்கும் பட்சத்தில் உந்துகணைகளின் நிறை பொருகளிவில் குறைவதோடு உந்துகணைகளின் எரிபொருட்களினால் சூழல் மாசடைதலும் முற்றாகத் தவிர்க்கப்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
தரையிலிருந்து விண்ணோக்கிப் பயணிக்கும் உந்துகணையின்மீது செலுத்தப்படும் சீரொளிக் கதிர், உந்துகணையின் சீரொளி இயந்திரப் பாகத்தில் பட்டு இயந்திரத்தை இயக்கி உந்துவிசையை வழங்குகின்றது. இதுதான் சீரொளி உந்துவிசையின் அடிப்படைத் தத்துவம். எனவே சீரொளிக் கதிர்களை உருவாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் புவியிலுள்ள நிலையத்திலேயே காணப்படும். புவியிலிருந்து வீசப்படும் கதிர்களே உந்துகணையை உந்திச்செல்லும். எனவே உந்துகணையினை இலகுவானதாகவும் நிறைகுறைந்ததாகவும் வடிவமைக்க முடியும்.
ஒளிக்கற்றை ஒன்றின்மூலம் உந்துகணையினை மேல்நோக்கி உந்திச்செல்லுதல் என்பது, கேட்பதற்கு விஞ்ஞானப் புனைவு போன்று காணப்பட்டபோதிலும், சீரொளிக் கதிர் உந்துவிசை என்பது பலதடவைகள் பலவழிகளில் பரீட்ச்த்துப் பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். பல விஞ்ஞானிகள் இந்த விடையம் தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.
இந்தவகை உந்துகணைகள், ஏனைய தற்போது பயன்படுத்தப்படும் உந்துகணைகளைப் போலல்லாது, பயணிக்கும்போது சமநிலையைப் பேணும்விதமாக உயர் வேகத்தில் சுழலத்தக்கவையாகக் காணப்படுகின்றன. தரையிலுள்ள நிலைத்திலிருந்து உருவாக்கப்படும் 10 கிலோவாற் சக்தியுடைய சீரொளிக் கதிரானது உந்துகணை இயந்திரத்திற் காணப்படும் குவிவாடியினாற் குவிக்கப்பட்டு இயந்திரத்தின் எரியூட்டும் பகுதிக்கு செலுத்தப்படுகின்றது. வினாடிக்கு 25-28 தடவைகள் செலுத்தப்படும் இந்த உயர் சக்திவாய்ந்த சீரொளிக் கதிர் 10000 தொடக்கம் 30000 பாகை செல்சியஸ் வரையான வெப்பத்தை உருவாக்குகின்றது. இஙந்திரத்திலிருக்கும் வளி இந்த வெப்பநிலையை அடையும்போது அது plasma நிலையையடைந்து உந்துகணையை உந்திச் செல்கின்றது.
விஞ்ஞானத்தின் இந்த வளர்ச்சியையிட்டு மனிதகுலம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். இருப்பினும் வல்லரசுகளுக்குக் கட்டுப்பட்ட இந்த வளர்ச்சி ஏனைய நாடுகளில் சத்தமின்றி அழிவுகளை ஏந்படுத்தவல்லன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment