பழமொழி.....

Sunday, May 29, 2011

உலகின் மிகப் பெரிய பயணிகள் வானூர்தி..

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய செகுசு விமானத்தை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
FILE

250 அடி நீளமுள்ள போயிங் 747-8 இண்டர்காண்டினென்டல் என்ற அந்த விமானத்தில் 467 பயணிகள் செல்லலாம். இது போயிங் நிறுவனத்தின் போட்டியாளரான ஃபிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏ380இல் செல்லக்கூடிய பயணிகள் எண்ணிக்கையை விட 51 பேர் அதிகமாகும். 

போயிங்கின் முந்தைய தயாரிப்பான 747-400 விமானத்தை விட இந்த புதிய அறிமுக விமானத்தின் சத்த அளவு 30 விழுக்காடு குறைவு என்றும், அதன் கரியமிள வாயு வெளிப்பாடு ஒரு பயணி அளவோடு மதிப்பீடு செய்கையில் 16 விழுக்காடு குறைவு என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.
FILE

“இந்த விமானத்தின் குறைந்த இயக்கச் செலவும், உள் அமைப்பும் பயணிகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்பதாக” போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜிம் ஆல்பாக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் போயிங் 747-8 விமானத்தின் முதல் தயாரிப்பு சேவைக்கு வரவுள்ளது. இதுவரை 33 விமானங்களுக்கு விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதில் லுஃப்தான்சா, கொரியன் ஏர் ஆகியனவும் அடக்கம் என்றும் போயிங் கூறியுள்ளது. 

இந்த விமானத்தின் அறிமுக விலை 31.75 கோடி டாலர்களாகும் (ரூ.1,430 கோடி). இந்த புதிய விமானம் வாஷிங்டனில் உள்ள போயிங் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு நடுவில் கோலாகலமான விழா நடத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.






No comments: