பழமொழி.....

Monday, May 2, 2011

மின்காந்தவியல் உந்துவிசை (Electromagnetic Propulsion)



விண்வெளி ஓடங்களில் பிரதான உந்து விசையினை உருவாக்குவதற்கு ஆரம்ப காலந்தொட்டு உந்துகணைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளும் விண்ணியல் பொறியியலாளர்களும் உந்துகணைகளுக்கு மாற்றீடானதும் விண்ணோடங்களை அதிவேகத்தில் செலுத்தவல்லதுமான மாற்று உந்து விசைகளான ஒளி உந்துவிசை, அணுசக்தி உந்துவிசை போன்ற உந்துவிசைகளைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவண்ணமுள்ளனர். இந்தவகையில் மாற்று உந்துவிசை வரிசையில் முன்மொழியப்பட்டதே மின்காந்தவியல் உந்துவிசையாகும்.
imagesமின்காந்தப் புலக் கதிர்களை அதி தாழ் வெப்பநிலைக்குக் கொண்டு செல்லும்போது மின்காந்தப்புலம் உருவாக்கப்பட்டு சிறிது நேரத்தில் அக்கதிர்கள் சுயமாக அதிர்வுக்குள்ளாகத் தொடங்குகின்றன. இவ்வாறு சுய அதிர்வுக்குள்ளாகும் மின்காந்தப் புலத்தினை ஒரு குறித்த திசையினை நோக்கிக் குவிப்பதன்மூலம் உந்துவிசையினை உருவாக்க முடியும் எனும் முன்மொழிவினை (proposal) அமெரிக்கப் பொறியியலாளரான டேவிட் குட்வின் என்பவர் முன்வைத்தார். இவ்வாறு மின்காந்தப் புலத்தின் மூலம் உருவாக்கப்படும் உந்து விசை ஏனைய வகை உந்துவிசைகளை விட அதிவேகமானதாக இருக்கும் எனவும் குட்வின் குறிப்பிடுகின்றார்.
மின்காந்தவியல் உந்துவிசையானது விண்வெளித்துறையில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே காணப்பட்ட போதிலும், தரைப் போக்குவரத்துத் துறையில் தற்போது பயன்பாட்டில் காணப்படுகின்றது. ஆனால் இரு துறைகளையும் பொறுத்தமட்டில் அவற்றின் புறச்சூழல் என்பது முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதுடன் இருதுறைகளிலும் மின்காந்தப் புலம் பயன்படுத்தப்படும் முறைகளும் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
தரைப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தொடருந்துகளில் மின்காந்தப்புல விசை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், தொடருந்துத் தடத்திலும் தொடருந்திலும் காணப்படும் மின்காந்தங்களினால் உருவாக்கப்படும் மிக்காந்த விசை ஒன்றையொன்று எதிர்த்திசையில் தாக்கும்போது, தொடருந்துத் தடம் நிலையாக இருக்கும் காரணத்தினால் தொடருந்து ஒரு திசையில் நகர்கின்றது. எனவே, இச்சந்தர்ப்பத்தில் மின்காந்தப் புல விசையின் தொழிற்பாடு எளிமையானதாகக் காணப்படுகின்றது.
MagLevCompModelஆனால் விண்வெளி ஓடங்களில் மின்காந்தப்புல உந்துவிசை பயன்படுத்தப்படும்போது, தொடருந்துகள் போன்று, எதிர்த்திசையில் தொழிற்படும் காந்தப்புலம் இங்கே காணப்படாது. எனவே, இங்கே காந்தப்புலத்தின் செயற்பாடு வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், மிகவும் வலுமிக்க மின்காந்தப்புலம் உருவாக்கப்படவேண்டி இருப்பதுடன் உருவாக்கும் வழிமுறையும் சிக்கலானதாகக் காணப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், அதிக வலுவுடன் உருவாக்கப்படும் மின்காந்தப்புலம் செலுத்தப்படும் திசையின் எதிர்த்திசையில் உந்துவிசையினை உருவாக்குகின்றது. இவ்வாறு வலுவான மின்காந்தப் புலத்தினை உருவாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
விண்வெளித்துறையில் மின்காந்தப்புல உந்துவிசையின் பயன்பாடென்பது ஆராய்ச்சி நிலையிலேயே காணப்படுவதன் காரணமாக சிறந்ததொரு இறுதிவடிவம் இதுவரை எட்டப்படவில்லை. அதுமட்டுமன்றி, இந்த மின்காந்தப்புல உந்துவிசையினைப் இலகுவான முறையில் பயன்படுத்தவல்ல வெவ்வேறு வடிவிலான விண்ணோடங்களை வடிவமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மற்றொரு பக்கத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணமுள்ளன.

No comments: