வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகளிலேயே பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உயர்ந்த மலைமேடுகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களிலிருந்தும் வானூர்திகளைப் பறக்கவிட்டு ஆய்வுகளை நடாத்திய சந்தர்ப்பங்களில் பல விபத்துக்களும் சேதங்களும் நிகழ்ந்துள்ளன.
ஆனாலும் 1920 களில் பயணிகள் வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தான் வானூர்தி விபத்துக்கள் அதிகரிக்கத் துவங்கின. 1923 ஆம் ஆண்டில் வானூர்தி விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கிகை முதற்தடவையாக நூறைக் கடந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பாரிய வானூர்தி விபத்துக்கள் நடக்காத போதிலும் 2009 ஆம் ஆண்டு Air France நிறுவனத்தின் வானூர்தி அட்லான்டிக் சமுத்திரத்திற்கு மேலால் பறந்தபோது புயலில் அகப்பட்டு கடலில் வீழ்ததில் 228 உயிர்கள் பலியானார்கள்.
வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கையின் போது ரைட் சகோதரர்களின் ஒருவரான Orville Wright செலுத்தும்போது உந்துகணை (Propeller) வெடித்து வானூர்தியில் மோதியதால் ஏற்ப்பட்ட விபத்தில் Orville Wright படுகாயமடைந்தார். இது தான் உலகின் முதல் வானூர்தி விபத்தாகும்.
உலகில் அதிகளவில் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய வானூர்தி விபத்தானது அமெரிக்காவில் நடந்த 11/9 தீவிரவாத தாக்குதல் ஆகும். இதில் 3,000 திற்கு அதிகமானோர் பலியானார்கள்.
உலகம் முழுதும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்த 2000 வானூர்தி விபத்துக்களில் 17,000 க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள வானூர்தி விபத்து பதிவு அலுவலகம் (Aircraft Crashes Record Office) தனது பதிவை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.
ஆண்டு | உயிர் இழப்புகள் | விபத்துக்கள் |
2012 | 794 | 119 |
2011 | 828 | 117 |
2010 | 1,115 | 130 |
2009 | 1,103 | 122 |
2008 | 884 | 156 |
2007 | 971 | 147 |
2006 | 1,294 | 166 |
2005 | 1,459 | 185 |
2004 | 771 | 172 |
2003 | 1,230 | 199 |
2002 | 1,413 | 185 |
2001 | 4,140 | 200 |
2000 | 1,582 | 189 |
1999 | 1,138 | 211 |