பழமொழி.....

Friday, April 15, 2011

குரூஸ் ஏவுகணை (Cruise Missile).....



நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
குரூஸ் வகை ஏவுகணைகள் ஏவுகணைத் தொழிநுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய படிக்கல். சிறியதொரு ஆளில்லா விமானத்தைப் போன்று இயங்கும் இவ்வகை ஏவுகணைக்குத் தாரை இயந்திரம் (Jet Engine) ஒன்றின்மூலம் 250px-Moskit_missileஉந்துசக்தி வழங்கப்படுவதுடன், இவை தன்னியக்க வழிச்செலுத்தி (Autopilot) மூலம் இலக்கை நோக்கி வழிநடாத்தப்பட்டு மிகவும் துல்லியமாக இலக்கினைத் தாக்கவல்லன. இவ்வகை ஏவுகணைகள் பொதுவாக பாரிய சாதாரண வெடிமருந்திகாலான வெடிபொருட்களையோ அல்லது அணுவாயுதங்களையோ காவிச்செல்ல வல்லனவாகக் காணப்படுகின்றன. மிகவும் தாழ்வான உயரத்தில் ஒரு விமானத்தைப்போன்று பறந்துசெல்லவல்ல இவ்வகை ஏவுகணைகள் எதிரிகளின் ரேடார் திரைகளிற் படாது தன்னியக்கமாக வழிநடாத்தப்பட்டு இலக்கைநோக்கிப் பயணிக்கவல்லன. அத்துடன் தாரை இயந்திரங்களால் இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை ஏவுகணைகள் இலக்கை அடைவதற்காக வழிமண்டலத்தைத் தாண்டிச்செல்ல வேண்டிய தேவை இல்லை.
ஓர் ஆளில்லா விமானம் போன்றே இவ்வகை ஏவுகணைகள் இயங்குகின்ற போதிலும், அடிப்படையில் இவை பறந்துசென்று இலக்கைத் தாக்கவல்ல வெடிகுண்டுகளே.
1916 இல் விமானப் பொறியாளர் ஒருவரால் TNT வெடிமருந்தைக் காவியபடி தன்னியக்கமாகப் பறக்கவல்ல விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதன்பால் கவரப்பட்ட அமெரிக்கப் பாதுகாப்புத்துறை, Kettering Bug என்றழைக்கப்படும் விமானமொன்றின் வடிவையொத்த, 120 கிலோமீற்றர்கள் பறந்துசென்று தாக்கவல்ல பறக்கும் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தது. இதனைத்தொடர்ந்து பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் இவ்வகையான ஏவுகணைகளைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டின. இவ்வகைப் பறக்கும் வெடிகுண்டுகள் Areal Torpedo என்றே அழைக்கப்பட்டன. அத்துடன், ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஏவுகணை வடிவங்களிற் சிலவற்றில் உந்துகணைகளே (Rockets) அவற்றுக்கான உந்து சக்திக்காகப் பயன்படுத்தப்பட்டன.
நவீன குரூஸ் ஏவுகணைகளில் அவற்றின் உந்துசக்திக்காக தாரை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் தொடக்கநிலை ஏவுதற் (Launch) செயற்பாட்டிற்காக உந்துகணைகளே பயன்படுத்தப்படுகின்றன. ஏவுபீடத்திலிருந்து (Launching Pad) ஏவப்பட்டதும் தொடக்கநிலை உந்துகணை தனியாகப் பிரிந்துவிட ஏவுகணையின் இயந்திரம் செயற்பட்டு ஏவுகணையை உந்திச்செல்லும்.
நவீன இராணுவங்களின் பயன்பாட்டிலுள்ள இவ்வகை ஏவுகணைகளில் பிரபல்யமான ஒன்று அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகளாற் பயன்படுத்தப்படும் BGM-109 Tomahawk ஏவுகணையாகும். 2500 கிலோமீற்றர் தூரவீச்சுக்கொண்ட இவ்வகை ஏவுகணைகள் 450 கிலோக்கிராம் வரையான வெடிபொருட்களைக் காவிச்செல்ல வல்லன என்பதுடன் சுழலிக்காற்றாடி (Turbo fan) இயந்திரத்தின் மூலம் வலுவூட்டப்படும் இவை மணிக்கு 880 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கவல்லன.
Tomahawk வகை ஏவுகணை தன்னியக்க வழிச்செலுத்தி மூலம் இலக்கைநோக்கி வழிநடாத்தப்பட்ட போதிலும், இவ் ஏவுகணை யுத்தகள வலையமைப்புடன் இணைந்து செயற்படும் (network-centric warfare-capability) வல்லமைமிக்கது. அதாவது இது இலக்கைநோக்கிப் பயணிக்கும்போது, யுத்தக்களத்தைக் கண்காணிக்கும் செய்மதிகள், வேவு விமானங்கள், முன்னணித் தாக்குதற் கலங்கள் போன்றவற்றிடமிருந்து தேவையான தகவல்களைப் பொற்றுக்கொள்ளவும், இதனது வழிகாட்டற் தொகுதியினால் சேகரிக்கப்படும் தகவல்களை வலையமைப்பிலுள்ள ஏனைய தாக்குதற்கலங்களுக்கு வழங்கவும் வல்லது. இவ்வேவுகணையின் (Tomahawk) இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த ஏவுகணை தாக்குதலுக்காகப் பறக்கும்போது இதன் மூக்குப்பகுதியிலுள்ள ஒளிப்படக்கருவியினால் (video camera) யுத்தக்களக் காட்சியை ஒளிப்படமெடுக்கு கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் இலக்குக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியவாறே தாக்குதல் இலக்கைநோக்கி நகரும். கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் இலக்குக் கண்காணிப்பாளர், தாக்குதல் இலக்கு ஒளித்திரையில் தெரியும்போது, அத்தாக்குதல் இலக்கு பிற தாக்குதல்களால் போதுமானளவு சேதமாக்கப்பட்டு விட்டதாகக் கருதுவாராயின் ஏவுகணையைப் பிறிதொரு இலக்குநோக்கித் திருப்பிவிட முடியும்.
நேட்டோ நாடுகளால் SS-N-22 Sunburn என்ற சங்கேதப் பெயரில் அழைக்கப்படும் ஏவுகணை, இரஸ்யத் தயாரிப்பு குரூஸ் வகை ஏவுகணையாகும். இந்த ஏவுகணை எதிரிக் கப்பல்களை இலக்கு வைப்பதற்காக இரஸ்யக் கடற்படையால் (முன்னை சோவியத் ஒன்றியக் கடற்படை) பயன்படுத்தப்படுகின்றது. 320 கிலோக்கிராம் சாதாரண வெடிபொருட் தொகுதியையோ அல்லது 200 கிலோதொன் அணுவாயுதத்தையோ காவிச்செல்லக்கூடிய இந்த ஏவுகணை, அதிவேகமான ramjet இயந்திரத்தால் இயக்கப்படுவதன் காரணமாக, ஏவப்பட்டு 25 தொடக்கம் 30 செக்கன்களினுள் எதிரிக்கப்பலைத் தாக்கியழிக்கவல்லது. உலகின் நவீன இராணுவங்களாற் பயன்படுத்தப்படும் அதிகூடிய வேகமான ஏவுகணைகளுள் இதுவும் ஒன்றாகும்.
250px-BrahMosஇதேபோன்று, இந்திய, இரஸ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்ட BrahMos, மற்றொரு குரூஸ் வகை ஏவுகணையாகும். தரையிலமைந்துள்ள ஏவுதளம், கப்பல், நீர்மூழ்கி மற்றும் விமானம் ஆகியவற்றிலிருந்து ஏவக்கூடியவாறு இந்த ஏவுகணை பல்வேறு வடிவங்களிற் காணப்படுகின்றது. இரஸ்யத் தயாரிப்பான ramjet இயந்திரத்தைக் கொண்ட இந்த ஏவுகணை 300 கிலோகிராம் வெடிபொருளை 290 கிலோமீற்றர் தூரத்திற்குக் காவிச்சென்று இலக்கைத் தாக்கவல்லது. இந்த ஏவுகணை ஒரு இந்திய, இரஸ்யக் கூட்டுத்தயாரிப்பு என்பதை உணர்த்தும்விதமாக, இந்த ஏவுகணையின் பெயர் இந்தியாவின் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ராவினதும் (Brahmaputra) இரஸ்யாவின் நதிகளில் ஒன்றான மொஸ்க்வாவினதும் (Moskva) பெயர்களைத் தாங்கியுள்ளது.
இவ்வகை ஏவுகணைகள் அவற்றின் அளவு, வேகம், தாக்குதல் வீசசெல்லை மற்றும் ஏவப்படும் தளத்தின் 300px-Brahmos_imdsஅமைவிடம் என்பவற்றைக்கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு ஏவுகணையானது வெவ்வேறுபட்ட ஏவுதளங்களிலிருந்து ஏவத்தக்கவாறு வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகை ஏவுகணைகளின் தன்னியக்க வழிச்செலுத்திகளில் செய்மதி வழிகாட்டற் தொகுதி (Satellite Navigation System), இலத்தினியல் வரைபட ஒப்பீடு (Terrain Contour Matching) போன்ற பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.





No comments: