பழமொழி.....

Sunday, April 10, 2011

கவிகையூர்தி (hovercraft).....



காற்று மிதப்பு ஊர்தி (air-cousin vehicle) என்றழைக்கப்படும் கவிகையூர்தி நீர் மற்றும் தரை மேற்பரப்பினூடு உயரழுத்த வளியினால் ஏற்படுத்தப்படும் மிதப்பு சக்தியின் உதவியுடன் பயணிக்கவல்ல ஊர்தியாகும். தரை மற்றும் நீர் மேற்பரப்புகளின் மேலே மிதப்பதற்காக இவ்வகை ஊர்திகள் உயரழுத்த வளியின் மூலம் கிடைக்கும் மிதப்பு சக்தியினைப் பயன்படுத்திய போதிலும் இவை வானூர்திகளாக (aircraft) வகைப்படுத்தப்படுவதில்லை.
கவிகையூர்திகள் பயணவூர்திகளிலே மிகவும் சிறப்பு வகையான பயணவூர்தியாகக் கருதப்படுகின்றன. இவ்வூர்திகள் உயரழுத்த வளியின் மூலம் கிடைக்கும் மிதப்பு சக்தியின் உதவியுடன் வளியில் மிதந்து செல்லத் தக்கவையாகக் காணப்படுவதால், இவ்வகை ஊர்திகள் நீர், தரை மற்றும் பனிப் பிரதேசங்களிலும் பயணிக்க வல்லவையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான ஊர்திகள் பொதுமக்கள் பயன்பாடுகளில் மட்டுமன்றி இராணுவப் பயன்பாடுகளிலும் காணப்படுகின்றன.
சுவீடனைச் சேர்ந்த Emanuel Swedenborg என்ற விஞ்ஞானியே 1716 இல் இவ்வகை ஊர்திகளின் அடிப்படைத் தத்துவத்தினைத் தனது ஆய்வுக்குறிப்பில் விளக்கியிருந்தார். இருந்தபோதிலும் 1915 220px-Hovercraft_leaving_Rydeஆம் ஆண்டிலே அவுஸ்திரேலியரான Dagobert Muller என்பவராலேயே இந்தத் தத்துவத்திலமைந்த முதலாவது ஊர்தி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர்க் காலம்வரை பல்வேறு நாடுகள் இவ்வகையான ஊர்திகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் இம்முயற்சிகள் தற்காலிக ஓய்விற்கு வந்திருந்த போதிலும் போரின் பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்றன.
கவிகையூர்திகளில் அவற்றின் முன்நோக்கிய நகர்விற்கான உந்துவிசையானது ஊர்தியின் பின்புறத்தின் மேற்பகுதியிலிருக்கும் சுழற்காற்றாடிகள் (propellers) மூலம் பெறப்படுகின்றது. ஊர்தியின் உடற்பகுதியின் நடுப்புறத்திலிருக்கும் impeller என்றழைக்கப்படும் உயரழுத்த வளியினை உருவாக்கவல்ல சுழலிகளின் மூலம் ஊர்தியின் கீட்புறத்தில் உயரழுத்த வளி உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் உயரழுத்த வளி ஊர்தியின் கீட்புற உடற்பகுதியினைச் சுற்றிலும் அமைந்திருக்கும் வளைவான தடித்த துணியினால் அமைந்த பகுதியினூடாகச் (skirt) செலுத்தப்பட்டு ஊர்தியின் கீட்பகுதியினூடாக வெளியேற்றப்படுகின்றது. இந்த உயரழுத்த வளியின் மூலம் பெறப்படும் மிதப்பு சக்தி ஊர்தியினைத் தரையிலிருந்து மேல்நோக்கி உயர்த்தி வைத்திருப்பதற்கு உதவுகின்றது. பொதுவாக கவிகையூர்திகளில் அவை முன்நோக்கி நகர்வதற்குரிய உந்துசக்தியை வழங்குவதற்காக தனியான சுழற்காற்றாடிகளே காணப்பட்ட போதிலும் சிலவகையான கவிககையூர்திகளில் மிதப்பு விசைக்காக உருவாக்கப்படும் உயரழுத்த வளியின் ஒருபகுதி ஊர்தியின் பின்புறத்திற் காணப்படும் nozzle இனூடாக வெளியேற்றப்படுவதன் மூலம் உந்துவிசை உருவாக்கப்படுகின்றது.
220px-Hovercraft_-_scheme.svgநவீன கவிகையூர்திகளிற் பயன்படுத்தப்படும் தடித்த துணியினாலமைந்த மிதப்பு சக்தியை உருவாக்கும் பகுதி Norman B.McCreary என்பவரால் வடிவமைக்கப்பட்டது. கவிகையூர்திகளின் தொழிநுட்ப வளர்ச்சியில் இவ்வடிவமைப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகக் காணப்படுவதுடன் இவ்வடிவமைப்பானது கொந்தளிக்கும் கடற்பகுதியினூடு கவிகையூர்தி இலகுவாகப் பயணிப்பதற்குப் பெருந்துணை புரிகின்றது.
1959 – 1961 வரையான காலபகுதியில், Saunders-Roe எனும் பிரித்தானியாவின் வானூர்தித் தயாரிப்பு நிறுவனம் SR.N1 என்றழைக்கப்பட்ட மனிதர்களைக் காவிச்செல்லவல்ல முதலாவது கவிகையூர்தியினைத் தயாரித்தது. தாட்பாள் இயந்திரம் ஒன்றைக் கொண்ட இந்தக் கவிகையூர்தி கடற்சிறப்புப் படையணியைச் (marrine) சேர்ந்த 12 வீரர்கள், அவர்களுக்குரிய ஆயுத தளபாடங்கள், ஒரு கவிகையீர்தி ஓட்டுனர் (pilot) மற்றும் ஒரு துணை ஓட்டுனர் (co-pilot) ஆகியோரைக் காவிச்செல்ல வல்லதாகக் காணப்பட்டது. இந்த SR.N1 கவிகையூர்தி மிதப்பு சக்தியை உருவாக்குவதற்காக தடித்த துணியினாலமைந்த அமைப்பிற்குப் பதிலாக, மிதப்பு சக்தியை உருவாக்கும் பிறிதொரு அமைப்பினைக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்துவந்த SR.N1 கவிகையூர்திகளின் வடிவங்கள் தடித்த துணியினாலமைந்த மிதப்பு சக்தியை உருவாக்கும் அமைப்புக்களுடன் மேம்படுத்தப்பட்டன.
சதுப்பு மற்றும் மென்மையான நிலப் பரப்பினூடான பயணங்களுக்கு கவிகையூர்திகளின் பயன்பாடு மிகவும் சிறப்பானதாகக் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கவிகையூர்தி மற்றும்220px-SRN4_Hovercraft_Mountbatten_Class விமான தொழிநுட்பங்கள் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட hoverbarge ஊர்திகள் அதிக எடையினைக் காவிச்செல்ல வல்லவையாகக் காணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தொடர்வண்டி போன்று இணைப்புப் பாதையூடாகப் பயணிக்கவல்ல கவிகையூர்தித் தொழிநுட்பத்திலமைந்த ஊர்திகளை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. அதிவேகத்தில் பயணிக்கும்போது ஏற்படும் உராய்வினை நீக்கும் நோக்குடனேயே இவ்வகை ஊர்திகளின் தயாரிப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இவ்வகை ஊர்திகள் hovertrain என்றழைக்கப்பட்டன. 1965 – 1977 வரையான காலப்பகுதியில் இவ்வாறானதொரு hovertrain ஊர்தி பரிசோதனை முயற்சியாக பிரான்சில் இயக்கப்பட்டது. பரிசோதனைச் செயற்பாட்டிற்கான உதவித்தொகைப் பற்றாக்குறை மற்றும் இத்திட்டத்திற்கான தலைமைப் பொறியாளரின் மரணம் என்பவை காரணமாக இத்திட்டம் 1977 இல் நிறுத்தப்பட்டது.
கவிகையூர்தி தொடர்பான சில தகவல்கள்.
  • உலகின் பொதுமக்கள் பாவனைக்கான மிகப்பெரிய கவிகையூர்தி பிரித்தானியாவின் SR.N4 Mk.IIIஆகும். இது 56.4 மீற்றர் (185 அடி) நீளமுடையதாகவும் 310 மெற்றிக்தொன் நிறை காவவல்லதாகவும் காணப்படுகின்றது. இது ஒரே தடவையில் 418 பயணிகளையும் 60 மகிழுந்துகளையும் (cars) காவிச்செல்லவல்லது.
  • உலகின் இராணுவப் பாவனைக்கான மிகப்பெரிய கவிகையூர்தி இரஸ்யாவின் Zubr class LCAC ஆகும். 57.6 மீற்றர் நீளமுடைய இது 535 தொன் நிறையினைக் காவிச்செல்லவல்லது. இக்கலம் ஒரேதடவையில் மூன்று T-80 வகை போர்த்தாங்கிகளையும் படைக்கலன்களுடன்கூடிய 140 படைவீரர்களையும் காவிச்செல்லவல்லது.
 

No comments: