பழமொழி.....

Saturday, October 1, 2011

வான் போக்குவரத்து துறை...

பறப்பது என்பது ஒவ்வொரு மனிதருக்குமே விருப்பமான ஒரு விஷயம்தான். மேலும் பறப்பதை பலர் பெருமையாகவும் கருதுவதால், அது சம்பந்தப்பட்ட தொழிலை தேர்ந்தெடுப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.

விமானத் தொழிலில் சில முக்கிய வகைகள் உள்ளன. சிவில், வணிகம் மற்றும் ராணுவம் ஆகியவை அந்த பெரும் பிரிவுகள்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து விதிமுறைகள், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. விமான நிறுவனங்கள், உள்கட்டமைப்பு துறை மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை, விமானப் போக்குவரத்து துறையின் பிரதானப் பிரிவுகள்.

மேலும், விமானத் தொழிலின் சில முக்கிய துறைகளை பார்க்கலாம்.

பொறியியல் துறை:

ஒரு இயந்திரம் என்ற முறையில், ஒரு விமானத்தில், பல சிக்கலான தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கும். மேலும், ஒரு விமானம் பறக்கும்போது பல பயணிகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சுமந்து செல்கிறது. அதேபோல ஒரு விமானமும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியான முறையான பராமரிப்பு ஒரு விமானத்திற்கு மிகவும் அவசியம்.

இந்த முக்கியப் பணியை மேற்கொள்வதுதான் பொறியியல் துறை. இந்த பணிக்கு, மெக்கானிக்கல், ஏரோநாடிகல் மற்றும் எலெக்ட்ரிகல் பிரிவுகளில் படித்த பொறியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஏரோநாடிகல் பொறியியலில், ஏர்கிராப்ட் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் ஆகிய பிரிவுகள் உள்ளன.

தேவையான பண்புகள்:

ஒரு ஏரோநாடிகல் அல்லது மெக்கானிக்கல் பொறியாளருக்கு எப்போதுமே விழிப்புணர்வு இருக்க வேண்டும். மேலும், தர்க்கரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும், புதுமையாகவும் சிந்திக்க தெரிய வேண்டும்.

வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்து:

விமானப் பயணிகளின் வசதிக்கேற்ப பல ஏற்பாடுகளை செய்தல், டிக்கெட்டுகள், கட்டணங்களை நிர்ணயித்தல், உணவு வழங்குதல், வியாபாரத்தை மேம்படுத்தல் ஆகிய பணிகள் இத்துறையை சார்ந்தது. இந்த துறையில், அதிகாரிகள், செயலர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள், அறிவிப்பாளர்கள், விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் தேவைகளை சரிசெய்பவர் போன்ற பணிகள் கிடைக்கும்.

செயலாக்கத் துறை:

பறத்தல் தொடர்பான, விமானிகளுக்கு(Pilot) பயிற்சி அழிப்பது உள்ளிட்ட, அனைத்து விஷயங்களுக்கும் இத்துறை பொறுப்பாகிறது. இத்துறையின் முக்கிய செயலதிகாரிகள் - விமான பொறியாளர்(Flight engineer), விமான தொழில்நுட்ப வல்லுநர்(aircraft technician), விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் தேவைகளை சரிசெய்பவர், Pilot அதிகாரி போன்றவர்கள். விமானப் பொறியாளர் என்பவர், ஒரு விமானத்தின் சீரான மற்றும் பாதுகாப்பான இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.

விமான தொழில்நுட்ப வல்லுநர் என்பவர், விமானத்தின் என்ஜின் மற்றும் அது தொடர்பான விஷயங்களை பராமரிக்கும் பணியை செய்கிறார்.


ஒரு Pilot என்பவர் விமானப் பயணத்தின் தலைவர். அவர்தான், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்கள் மற்றும் அந்த விமானத்தின் பாதுகாப்பிற்கு முழுமுதல் பொறுப்பு. 


தேவைப்படும் குணாதிசயங்கள்:

சவால்களை சந்திப்பதற்கான ஆர்வம், பல மணிநேரங்கள் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன், உடல் தகுதி, விழிப்புணர்வு, விரைவாக முடிவெடுக்கும் திறன் போன்றவை இப்பணிக்கு மிகவும் தேவையான தகுதிகளாகும்.

No comments: