பழமொழி.....

Thursday, October 6, 2011

மிக பெரிய ரகசிய இராணுவத்தளம்...

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  


அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது. 





முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990  
 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும்  வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .    
                                                     

                                                         Stealth


                                                                        

பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,000 அடி உயரம் வரை செல்லக்கூடியது .

                                                                SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ). 


                                                               TR3A Black Manta



அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு. சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .

ஏரியா  51 மேலாக  பறக்கும்  தட்டு  1 


ஏரியா  51 மேலாக  பறக்கும்  தட்டு  2 



3 comments:

Anonymous said...

well

Anonymous said...

எங்க ஏரியா உள்ளே வராதே........

Anonymous said...

வந்தால் என்ன?