பழமொழி.....

Tuesday, October 11, 2011

பறந்த சமையல் எண்ணெய்.....





வானூர்திகள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள வானூர்தி நிறுவனம் ஒன்று தனது வானூர்தியை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.
தாம்சன் ஏர்வேஸ் என்ற வானூர்தி நிறுவனமே இத்தகைய சாதனையை படைத்துள்ளது. போயிங் 757 ( Boeing - 757 )ரக வானூர்தியில் 2 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இயந்திரம் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டது.
மற்றொரு இயந்திரம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மூலம் இயங்கியது. அதற்காக வீடுகளின் சமையலறைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன.
அவை அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த வானூர்தி பர்மிங்காமில் இருந்து லான்ஷோரக் நகருக்கு கடந்த வாரம் இயக்கப்பட்டது. அதில் 232 பயணிகளும், வானூர்தி ஊழியர்களும் பயணம் செய்தனர்.
உலகிலேயே முதன் முறையாக சமையல் எண்ணெய் மூலம் வானூர்தியை இயக்கி சாதனை படைத்ததை பெருமையாக கருதுவதாக தாம்சன் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் விமானங்கள் முழுவதையும் சமையல் எண்ணெய் மூலம் இயக்க இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Tui-owned airline Thomson Airways has flown 232 passengers to Lanzarote yesterday aboard an aircraft that was powered by sustainable biofuel.





5 comments:

Anonymous said...

விமானத்திலை இனி சமைக்கலாம்

Anonymous said...

சாப்பாடு விலை கூடப்போகித்து

விண்ணும் மண்ணும் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ok ok

Anonymous said...

mmmmmmm