பழமொழி.....

Friday, October 14, 2011

விபத்தை தவிர்க்கும் உலங்குவானூர்தி


UNSW@ADFA gas-turbine powered helicopter.This helicopter is fitted with laser range finder, embedded vision sensor, GPS and Inertial Measurement Sensors.
   வானூர்தி என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உலங்குவானூர்தி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.
இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள். அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் வானூர்திகள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கணினி கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு வானூர்தி அல்லது உலங்குவானூர்தி ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, காலநிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே வானூர்தி பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் வானூர்தி மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது வானோடியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.
இல்லாவிட்டால் வானூர்தி செல்லும் பாதையில் மற்றொரு வானூர்தியோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி வானூர்தியில் கோளாறால் திடீரென தரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.
இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (AEROBOT PROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த உலங்குவானூர்தியை  தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் வானூர்திகளை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி தன் எதிரே வரும் வானூர்தி அல்லது உலங்குவானூர்தி இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.
அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது வானூர்தியிலோ மோதாமல்  விபத்தை தவிர்த்துவிடும்.எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.
வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட வானூர்திகள் உருவாக்கப்படுவது நிச்சயம்.

No comments: