மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் வானூர்தி (மிகையொலி வானூர்தி) ஆகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 வானூர்தியை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்வானூர்தியின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் வெவ்வேறு வேகம் மற்றும் வெவ்வேறு உயரத்தில் பறக்கும் பொருட்கள், ஏவுகணைகள், வானூர்திகள் போன்றவற்றை அழிக்கும் திறன் இதன் சிறப்பம்சமாகும்.
இதனால் மிகப்பெரும் வான்வெளியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், அதிக உயரத்தில் பறக்கும் மிகையொலி வானூர்திகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் குறையோலி வானூர்திகள் எவையாயினும் எந்த காலநிலையிலும், பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும் வான் எப்படிப்பட்ட (நகரும் அல்லது நிலையான) இலக்கானாலும் தொடர்ந்து சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Foxhound என்பதாகும்.
இது சோவியத் வானூர்திகளில் Multiple-target (பல்-இலக்கு), N007 Zaslon radar (இது 200 கிமீ தூரத்தில் உள்ள 10 இலக்குகளை ஒரே நேரத்தில் முன்னோக்கியும்,பெரிதாகவும் காட்டக்கூடியது), மற்றும் look-down, shoot-down capability (இது அடிவானத்திற்கு கீழே நகரும் வான் இலக்கை கண்காணிக்க மற்றும் கண்டறிய வழிகாட்டும் ஒரு ரேடார் அமைப்பு) ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய வானூர்தி கண்காட்சியாக "சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி 2012" விளங்கியது. இது விண்வெளி, போக்குவரத்து வானூர்திகள், இராணுவ வானூர்திகள், போர், நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது.
சாங்கி கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடைபெற்ற கண்காட்சியில் 50 நாடுகளிலிருந்து குறைந்தது 900 exhibitors ( வானூர்திகள் மற்றும் காட்சி பொருட்கள்) மற்றும் 80 நாடுகளில் இருந்து 266 பிரதிநிதிகளும் இக் கண்காட்சியில் பங்குபற்றின.
100 விண்வெளி நிறுவனங்களின் 60 பிரதிநிதிகள், மற்றும் 20 வானூர்தி நிறுவனங்கள் என்பனவும் கலந்து கொண்டன.
50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பிரதேசத்தில் 22 அரங்குகள் இருந்தன. முதல் முறையாக ஜப்பான் மற்றும் உக்ரைன் அரங்குகள் அங்கு இருந்தன.
மேலும் உள்ளக பாதுகாப்பு மற்றும் ஆளில்லா உளவு வானூர்தி (UAV) அரங்கில் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) தளங்களில் உள்ள உயர் தொழில்நுட்பங்கள், நிலம் சார்ந்த பாதுகாப்பு தயாரிப்புகள், மற்றும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
பசுமை அரங்கில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க மாற்று எரிபொருள் உருவாக்கம் பற்றிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
100,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட வெளியரங்கில் 65 க்கு மேற்ப்பட்ட சமீபத்திய இராணுவ வானூர்திகள், பயணிகள் வானூர்திகள் மற்றும் ஆடம்பர வணிக வானூர்திகள் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக போயிங் 787 Dreamliner (கனவு வானூர்தி) சிங்கப்பூருக்கு தனது முதலாவது வருகையை பறைசாற்றியது. அத்துடன் ஏர்பஸ் இராணுவ நிறுவனத்தின் A330 MRTT multi-role tanker மற்றும் the ACJ318 corporate jet ஆகியவற்றிக்கும் சிங்கப்பூர் புதியது தான்.
சிங்கப்பூர் வான்படையின் (RSAF) F-15SG வானூர்தியும் F-16C வானூர்தியும் அத்துடன் மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளும் பல சிறப்பான வான் சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.அத்துடன் ஆஸ்திரேலிய Blair Aerosports flying நிறுவனத்தின் வானோடி Rebel 300 single propeller வானூர்தியை கொண்டு வான் சாகசங்களை நிகழ்த்தியது சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி வரலாற்றில் முதன் முதலாக இடம்பெற்று இருந்தது.
சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி 2012 இன் அமைப்பாளர் திரு ஜிம்மி லா இந்த கண்காட்சி சிங்கப்பூருக்கு புதிய நன்மைகளை கொண்டு வரும் என தெரிவித்தார்.
சிங்கப்பூர்வான் படையின்F-15SG வானூர்தியின் வான் சாகசம்.
சிங்கப்பூர்விமான படையின்F-15SG (வலது) மற்றும் F-16C வானூர்திகளின் வான் சாகசம்.
மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளின் வான் சாகசம்.
மஹிந்த ராஜபக்ஷசிங்கப்பூர் வானூர்தி கண்காட்சியில் இடம்பெற்ற7.62mm general purpose machine gun (GPMG) பார்வையிட்டார். (தமிழர்களின் கவனத்திற்கு)
சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த போயிங் F-15SG Eagle fighter jet.
மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளின் வான் சாகசம்.
ஆஸ்திரேலிய Blair Aerosports flying இன் வான் சாகசங்கள்.
வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த போயிங் 787 Dreamliner (கனவு வானூர்தி)
வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த வானூர்திகளின் வான் சகச காணொளி
மிக்-29 ஓர் சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்ட ஒருநான்காவது தலைமுறை ஜெட் வானூர்தி ஆகும். அமெரிக்க வான்படையினரின் McDonnell Douglas F-15 Eagle, F-16 Fighting Falcon வான் சண்டை வானூர்திகளுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டதாகும். இது சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Fulcrum" என்பதாகும்.
மிக்-29 வானூர்தியின் சிறப்பம்சங்கள்........
இது ஒரு ஒற்றை இருக்கை மிகையொலி வானூர்தியாகும்.
அதி சிறந்த Aerodynamic வடிவதையும் மற்றும் சிறந்த வானோடி அறையையும் (cockpit) தன்னகத்தே கொண்டுள்ளது.
அனைத்து விதமான வானிலை மற்றும் காலநிலைகளில் செயல்ப்படக் கூடியது.
இது 60 to 200 கிலோமீட்டர் வரை உள்ள வானிலோ, தரையிலோ உள்ள இலக்குகளை எப்படியான உயரத்திலும் மற்றும் எப்படியான காலநிலையிலும் துல்லியமாக அழிக்ககூடியது.
precision வழிகாட்டல் படி நகரும் இலக்குகளை அழிக்ககூடியது.
இது அமெரிக்க வான்படையினரின் F-16 Fighting Falcon வான் சண்டை வானூர்தியை ஒத்துள்ளது.
R-60/AA-8 Aphid, R-27/AA-10 Alamo, R-73/AA-11 Archer, R-77/AA-12 Adder போன்ற வானிலிருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
AS-12, AS-14, AS-17 போன்ற வானிலிருந்து தரைக்குச் செல்லும் ஏவுகணைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
மிக்-29 வானூர்தியின் இன் உற்பத்திகள்
9-01
ஆரம்ப உற்பத்தி மாதிரி
MiG-29 'Fulcrum-A'
nose gear, fin, and rudder வகையான மாறுபட்ட மூன்று சிறிது மாறுபட்ட மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது
MiG-29UB 'Fulcrum-B'
இரண்டு இருக்கை பயிற்சி நீக்கப்பட்டது.
MiG-29S 'Fulcrum-C'
வானுடல், எரிபொருள் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. ஒற்றை இருக்கையாக மாற்றப்பட்டது.
MiG-29KVP
arrestor gear systems மாற்றப்பட்டது.
MiG-29K 'Fulcrum-D'
வானூதி தாங்கி கப்பலுடன் இணைக்கப்பட்டு பின்னர் இந்தியாக்கு விற்கப்பட்டது.
MiG-29KU
மூக்குப் பகுதி மாற்றப்பட்டது.
MiG-29KUB
இந்தியாக்கும், இரசிய வான்படைக்கும் விற்கப்பட்டது.
MiG-29B
இரண்டு இருக்கை.
MiG-29UBT
இரண்டு இருக்கை மற்றும் விசேட படை நடவடிக்கைகளுக்காக மாற்றப்பட்டது.
MiG-29SD
ஏறுமதி
MiG-29SE
மிக்-29S இன் புதிய பதிப்பு.
MiG-29N
விமான எரிபொருள் நிரப்பும் வசதி, மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு கருவிகள், மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள்,மேம்படுத்தப்பட்ட navigation systems
MiG-29UBN
இரண்டு இருக்கை.மலேசியாக்கு விற்கப்பட்டது.
MiG-29SM
MiG-29S/SE இன் புதிய பதிப்பு. விமான எரிபொருள் நிரப்பும் வசதி, மேம்படுத்தப்பட்ட air-to-air ஏவுகணைகள் KAB-500KR வழிநடத்தப்பட்ட குண்டு அல்லது KH-29T ஏவுகணை போன்றவற்றை காவிச்செல்லல்.
MiG-29SMT
MiG-29SM இன் புதிய பதிப்பு. மேம்படுத்தப்பட்ட, cockpit, மேம்படுத்தப்பட்ட மின்னணுவியல்.
MiG-29SMT-2
புதிய radar, மேம்படுத்தப்பட்ட இயந்திரம், digital fly-by-wire control system,
MiG-29SMTK
மடிப்பு இறக்கைகள், arrestor gear, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊடுருவல் முறையை சேர்க்கிறது.
MiG-29M 'Fulcrum-E'
fly-by-wire கட்டுப்பாடுகள், மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள்.
மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும்.
இதன் சிறப்பம்சங்கள்
அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற்பத்திசெய்யப்பட்டன.
கவசதினால் பாதுகாக்கப்பட்ட வானோடி அறையை (Cockpit) தன்னகத்தே கொண்டது.
ஆயுதங்கள், rocket pods, bombs, guided ஏவுகணைகள் ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
KAB-500L லேசரினால் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் KAB-500KR தொலைக்காட்சியினால் வழிநடத்தப்படும் குண்டு ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
500kg அளவு, கொத்து குண்டுகள் மற்றும் தீமூட்டும் சாதனங்கள், S-24, S-25,S-8, S5 unguided rockets, மற்றும் வான்வழி குண்டுகள் ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
இதில் Inferior மின்னியல் கருவிகள் பொறுத்தப்ப்பட்டுள்ளன.
இது high-mounted, variable, swept-back, and tapered with blunt tips கொண்ட இறக்கைகளை தன்னகத்தே கொண்டது.
சிறீலங்கா வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் தமிழரை அழிப்பதற்கு மிக் -27 வானூர்தியை ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வருகின்றது. கடைசி கட்ட ஈழப்போரில் மாத்திரம் மிக்-27 யுத்த வானூர்திகள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன என முன்னாள் விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அழிந்த மிக்-27
மிக்-27 வானூர்தி அதன் உக்ரேனியன் வானோடியுடன் நீர்கொழும்பு அருகே விழுந்து நொறுங்கியது.
ஜூலை 2001 இல், தமிழீழ போராளிகளின் கட்டுநாயக்க விமான படை தளம் மீதான வீரம் செறிந்த தாக்குதலின் போது மிக்-27 பல வானூர்திகளுடன் அழிக்கப்பட்டது.
ஜூன் 2004 இல் நீர்கொழும்பு கடலில் விழுந்து நொறுங்கியது.
தமிழீழப் போராளிகளால் 2007 ஆம் ஆண்டு இரணைமடுவில் வானில் வைத்து தாக்கி அழிக்கப்பட்டது.
புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதியில் சற்றுமுன்னர் மிக் 27 ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மிக்-23 தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் வானூர்தியாகும். 1970 இல் இதன் உற்பத்தி தொடங்கியது. மிக்-23 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Farmer என்பதாகும். சிறீலங்கா வான்படை இவ்வானூர்திகளை கொண்டு இனப்படுகொலை செய்வதற்கு தனது விமானிகளைப் பயிற்றுவிற்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்
நம்பகமான வலுவான இயந்திரம்
எளிதான பராமரிப்பு
பறப்பியல் துறையில் அதிக திறன்கள்
பல சிறப்பியல்புகள் கொண்ட வானூர்தி
எல்லா நேரங்களிலும் வெற்றிகரமான பறப்புக்கள் கொண்டது.
Role
சண்டை வானூர்தி
Manufacturer
மிகோயன்-குருவிச்
First flight
10 June 1967
Introduction
1970
Status
வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது
Primary users
சோவியத் வான்படை
சிறீலங்கா வான்படை,
இந்திய வான்படை,
சிரிய வான்படை
Produced
1967–1985
Number built
5,047
மிக் -25
மிக் 25 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தியாகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. வானூர்தியின் முன்மாதிரி 1964 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்வானூர்தி Mach 2.83+ என்னும் அதிஉயர் வேகத்தை கொண்டது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராடர் மற்றும் வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் நான்கு ஏவுகணைகளையும் (air-to-air missiles) தன்னகத்தே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் McDonnell Douglas F-15 Eagle என்னும் வானூர்தியை தயாரிக்கத் தூண்டியது. மிக் 25 வானூர்தியின் தயாரிப்பானது 1984 ஆம் ஆண்டு 1,190 வானூர்திகளைத் தயாரித்த பின்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இவ்வானூர்தி இன்று ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் சிலவற்றில் சேவையில் உள்ளது. மிக்-25 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Foxbat என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்
ஒரு உயர் அழுத்தம் கொண்ட R-15B-300 இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
உயர் வெப்பநிலை கொண்ட T-6 வானூர்தி எரிபொருளாகவும் aircraft cooling system அமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
மிக அதிக வேகம் காரணமாக வானூர்தியின் பெரும் பகுதி இரும்பு, மற்றும் டைட்டானியம் கலப்புலோகங்களினால் கட்டப்பட்டன.
அதி சக்தி வாய்ந்த ராடர், வானோடியின் (pilot) பங்களிப்பு இல்லாமல் இலக்கு நோக்கி வானூர்தியை இயக்கும் திறன் மற்றும் தன்னிச்சையாக தீயை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Role
இடைமறித்து தாக்குதல், உளவு பார்த்தல்
Manufacturer
மிகோயன்-குருவிச்
First flight
6 March 1964
Introduction
1970
Status
பயன்பாட்டில் உள்ளது
Primary users
சோவியத் வான்படை
ரஷிய வான்படை,
அல்ஜீரிய வான்படை,
சிரிய வான்படை
மிக் 19 ஒரு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைமுறை, ஒற்றைஇருக்கை, இரட்டை ஜெட்-இயந்திர போர் வானூர்தியாகும். சோவியத் யூனியனின் முதலாவது மிகையொலி (Supersonic) வானூர்தியும் இதுதான். இதுவரை அதாவது 1954 ல் முதல் 1957 ஆம் ஆண்டு வரை 2,069 க்கும் மேற்பட்ட மிக்-19 வானூர்திகள் தயாரிக்கப்பட்டன. மிக்-19 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Farmer என்பதாகும். முதலில் மிக்-19P என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் விபத்துக்கள் மற்றும் இயந்திரத்தின் நம்பகத்தன்மை காரணமாக நிறுத்தப்பட்டு, இன்னும் சக்திவாய்ந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மிக்-19S உருவாக்கப்பட்டது. அத்துடன் நவீனமாக்கப்பட்ட elevator, வால் பகுதி மற்றும் அனைத்து வானிலையிலும் செயல்திறன் கொண்ட ரேடார் ஆகியவை இணைக்கப்பட்டன. வானிலிருந்து வானுக்கு செல்லும் ஏவுகணைகளை காவும் திறனும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Role
ஜெட் போர் வானூர்தி
Manufacturer
மிகோயன் & குருவிச்
First flight
18 September 1953
Introduction
March 1955
Status
பாவனையில் இல்லை.
Primary users
Soviet Air Force
People's Liberation Army Air Force
24 others
Number built
2,172
Developed into
மிக்-21
மிக் -21
மிக் 21 சோவியத் யூனியனின் போர் வானூர்தியாகும். இது சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் இரண்டாம் தலைமுறை வானூர்திகளாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் மூன்றாம் தலைமுறை வானூர்திகளாகவும் கருதப்பட்டன. இது முகோண இறக்கையையும் அம்பு வடிவ Fin னையும் கொண்டுள்ளது. மிக்-21 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fishbed என்பதாகும்.
இதன் சிறப்பம்சங்கள்................
இரண்டாம் உலக போருக்குப் பின்னர்மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
இது 50 ஆண்டுகளாக தொடர்ந்து தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
இது நான்குதலைமுறைகளுக்கு20மாறுபட்ட ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
இது நான்கு கண்டங்களில்சுமார் 50 நாட்டு வானூர்திபடைகள் பயன்படுத்துகின்றன.
Role
ஜெட் போர் வானூர்தி
Manufacturer
மிகோயன் & குருவிச்
First flight
14 February 1955
Introduction
1959
Status
பயன்பாட்டில் உள்ளது.
Primary users
சோவியத் வான்படை
இந்திய வான்படை
பல்கேரிய வான்படை50 others
மிக்-15 ஆனது 1947 இல் தயாரிக்கப்பட்ட முதல் வெற்றிகரமான 35-degree wing sweep இறக்கையை கொண்ட ஜெட் போர் வானூர்தியாகும். இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட மிக்-15 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. கொரியா போரில் அமெரிக்காவின் F-86 போர் வானூர்திக்கு இணையாகவும் சிறந்த போர் வானூர்த்தியாகவும் செயல்ப்பட்டதாக கொரியா போர் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக்-15 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fagot என்பதாகும். இதற்கு Klimov RD-45 எனப்படும் ரஷ்யாவின் Nene turbojet இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
Role
ஜெட் போர் வானூர்தி
Manufacturer
மிகோயன் & குருவிச்
First flight
30 December 1947
Introduction
1949
Status
பயிற்சி வானூர்தி
Primary users
Soviet Air Force PLA Air Force Korean People's Air Force
41 others
Number built
~12,000 + ~6,000 in license
Developed into
மிக்-17
மிக் -17
மிக்-17 ஆனது 1952 இல் தயாரிக்கப்பட்ட உயர்-குறையொலி (High-Subsonic) போர் வானூர்தியாகும். இதன்பீரங்கிகளால் பல வானூர்திகளை சுட்டு விழுத்த முடியும் ஆனாலும் air-to-air ஏவுகணைகளை இவற்றினால் காவிச்செல்ல முடியாது.இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட மிக்-17 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. வியட்நாம் போரில் அமெரிக்காவின் மிகையொலி (Supersonic) போர் வானூர்திகளுக்கு எதிராகவும் அவற்றிக்கு இணையாகவும் செயல்ப்பட்டது. மிக்-17 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fresco என்பதாகும். மிக்-15 கொரியா போரில் சாதனை படைத்து என்றால் மிக்-17 வியட்நாம் போரில் சாதனை படைத்து.
மிக்-17 ஆனது மிக்-15 வானூர்தியை விட பெரியஇறக்கைகள்,நீண்டஉடற்பகுதி, எரிபொருள் சக்தி,சிறந்தவேகம்மற்றும் இலகுவான கையாளுதல் போன்ற பண்புகள்கொண்டது.
Role
உயர்-குறையொலி போர் வானூர்தி
Manufacturer
மிகோயன் & குருவிச்
First flight
14 January 1950
Introduction
October 1952
Status
Active with North Korea airforce and Pakistan air force.
Primary users
Soviet Air Force
PLA Air Force
Polish Air Force
Vietnam People's Air Force
41 others