பழமொழி.....

Sunday, July 24, 2011

காற்றின் அழுத்தமும் அடர்த்தியும்..


காற்றின் குணங்கள்..
1. காற்றழுத்தம் (Pressure)
2. காற்றின் அடர்த்தி (Air density)
3. காற்றி வெப்பம்( Air Temperature)
4. காற்றின் வேகம்(Wind Speed)
5. காற்றின் ஆற்றல்(Entropy)
இதில் விமான பயணத்தில் காற்றி அழுத்தம் மட்டுமே நம்மை நேரடியாகவும், மற்றவை விமானத்தின் இயக்கத்தையும் பாதிக்கும்.
                                 காற்றழுத்தம் (Pressure)

 கடல் மட்டத்தில் காற்றி அழுத்தம்
101.3 Kilo Newton Force
1013.25 mili Bar pressure (mb)
14.7 Inches of Hg (Mercury)
760 Millimeters of Mercury (mm Hg) அதில் O
2 அழுத்தம் மட்டும் 160 mm Hg
33.9 feet water pressure
29.92 Pounds per squire Inches of mercury
இருக்கும் ஆனால் நாம் உயர போக போக அது குறைந்து கொண்டே வரும்.
10,000 அடி உயரத்தில் 523 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 105 mm Hg
20,000 அடி உயரத்தில் 349 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 70 mm Hg
30,000 அடி உயரத்தில் 225 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 45 mm Hg
40,000 அடி உயரத்தில் 141 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 29 mm Hg
இதில் காற்றழுத்தம் நம்மை இரண்டு விதமாக பாதிக்கும், உடலுக்கு வெளியே அழுத்தம் குறையும் போது நம் உடலில் உள்ள திரவத்தில் இருக்கும் காற்று வெளிவர ஆரம்பிக்கும் ( அதாவது குறைந்த அழுத்ததினால் நம் ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்) இது 25, 000 அடிக்கு மேல்தான் ஆரம்பிக்கும் அதன் பெயர் எபுலிஸம் லெவல். (Ebulisam Level)
இரண்டாவதாக காற்றில் உள்ள ஆக்ஸிசன் குறைவதால் மயக்கம் ஏற்படும், மனிதனால் 10,000 அடிக்கு மேல்தான் இது ஆரம்பிக்கும் 25,000 அடிக்கு மேல் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அழுத்தம் மிக குறைவு அதனால் மனிதன் மயக்கம் அடைந்து விடுவான்.
அதனால் விமானத்தின் உள் இருக்கும் அழுத்த்தை செயற்கை முறையில் 8,000 அடியில் இருக்குமாறு கண்ணி மூலம் கட்டுபடுத்துவார்கள்.
                        
                   காற்றின் அடர்த்தி (Air Density)

காற்றின் அடர்த்தி (Air Density) விமான இயக்கத்தை இருவிதமாக பாதிக்கும். ஒன்று அடர்த்தி குறைந்தால் இயந்திரத்தின் (Engine) உருவாகும் வலு (power) குறையும், அதனால் தேவையான வலு (power) கிடைக்காது, Take off சமயத்தில் விபத்து ஏற்படலாம். இரண்டாவது விமானத்தின் உயரம் காட்டும் கருவி உண்மையான உயரத்தை விட அதிகமாக காட்டும், அதனாலும் விபத்து ஏற்படலாம். உ.ம்.
ஒரு மலையின் உயரம் 8,000 அடிகள். அதை கடக்க விமானம் குறைந்த பட்சம் 10,000 (2,000 அதிகமாக) கடக்க வேண்டும் என் வைத்துக் கொள்வோம். காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்து இருக்கும் போது விமானம் 7,000 அடிகள் இருக்கும் போதே உயரம் காட்டும் கருவி 10,000 அடி என்று காட்டும். அப்படி என்றால் அந்த விமானம் மலையை கடக்கும் போது மலையில் மோதி விபத்துக்குள்ளாகும்.
அதற்கு விமான பயிற்சியின் போது சரியான பயிற்சி முறைகள் சொல்லி தருவார்கள், அப்படி இருந்தும் சில விபத்துகள் நடந்து இருக்கிறது.
காற்றின் வெப்பம்: அதிகரித்தால் காற்றின் அடர்த்தி குறையும், மேலே கூறிய அனைத்தும் விளைய வாய்ப்புகள் உண்டு.
காற்றின் வேகம்: Take Off, Landing எப்போதுமே எதிர்காற்றில்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் விமான தரையில் ஓடும் தூரம் குறையும். அதே போல் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் காற்று இருந்தாலும் விமானம் பறக்க அனுமதி இல்லை.





Friday, July 22, 2011

மகிழுந்து விண்ணில் பறக்க முடியுமா?



புதுவிதமான பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார். இந்த கார் விண்ணில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் கார் திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இது 2 இருக்கைகள் மட்டுமே கொண்டது. மிகவும் எடை குறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 800 கி.மீட்டர் தூரம் செல்ல செலவாகும் எரிபொருள் நிரப்பும் டேங்கு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் விரியும். அதே நேரத்தில் ரோட்டில் இறங்கி கார் ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங்களாக வடிவம் பெறும். இந்த நிகழ்வு 15 வினாடிகளில் நடைபெறும்.
ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.
இதை ஓட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும். புதுவகையான இக்கார்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க ரோடுகளில் ஓடுவதை காணமுடியும்
இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.        
இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.


Thursday, July 21, 2011

Gliders. (கிளைடர்கள்)


                                                Parasailing  (பார கிளைடிங்)

இதில் சாதாரண விமானத்திற்கோ அல்லது விமானிகளுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் பெண்கள், குழந்தைகள் சாதரணமாக  50 கிலோவிற்கு மேல் இருப்பவர்கள் பறக்கலாம்.
ஒரு பாரசூட்டை (வான் குடை) பறப்பவருக்கு கட்டிவிடுவார்கள். அதன் பின் அதை ஒரு நாலு சக்கர வண்டியில் அல்லது ஒரு வேகப்பலகையில் (Speed Board) கட்டி இழுத்து மேலே பறக்கவிடுவார்கள். அல்லது உயரமான மலையில் இருந்து குதிப்பார்கள்.
அதன் அனுபவம் எப்படி இருக்கும் என கீழே இருக்கும். கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.

                            Hang Gliding (ஹேங் கிளைடிங்)

இது  பாரசூட்டுக்கு பதில் இரும்பினால் ஆன முக்கோண வடிவ குழாய்களால் செய்யப்பட்ட இறக்கையில் அதற்கென்ற செய்யப்பட்ட துணியால் இணைத்து பறப்பது. இதுவும் உயரமான இடத்தில் இருந்தும் குதிக்கலாம், அல்லது அதிலேயே ஒரு என்ஜின் (Engine) பொருத்தியும் பறக்கலாம்.
 கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.

                          Microlight Aircraft (மைக்ரோலைட் விமானம்)

 இது மிகவும் எடை குறைந்த விமானம். சிறிய அளவு (சிறியவெளி)  இடத்தில் கூட எளிமையாக இறக்கலாம். ஒருவர் அல்லது இருவர் பயணிக்க கூடியது. ஆனால்  இதற்கு Engine   பொருத்தப்பட்டுள்ளது.
  கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.

Wednesday, July 20, 2011

வானூர்தியின் கருவிகள் (Avionics)





1. Airspeed Indicator          - வேகம் காட்டும் கருவி
2. Attitude Indicator            - செயற்கையாக உயரம் காட்டும் கருவி
3. Altimeter                          - உயரம் காட்டும் கருவி


4. Turn Coordinator              - திருப்பம் காட்டும் கருவி
5. Heading Indicator             -  திசைகாட்டும் கருவி
6. Vertical Speed Indicator  - மேலே கீழே இறங்கும் வேகம் காட்டும் கருவி
    (variometer)






Airspeed Indicator - வேகம் காட்டும் கருவி





வேகம் காட்டும் கருவி என்பது மனிதனின் இதயம் போன்றது. விமானம் பறக்கும் போது அதில் இருக்கும் முள்தான் விமானத்தின் இதய துடிப்பை காட்டும். படத்தில் இல் இருக்கும் கருவியில் 40 Knot இல் இருந்து 260 Knot வரை குறிக்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள நிறங்கள்:
(The knot is a unit of speed equal to one nautical mile (which is defined as 1.852 km) per hour, approximately 1.151 mph1)
வெள்ளை :62 Knot என்பது (Vso -Velocity Basic Stall Speed) கீழே வேகம் வந்தால் (flap, slats கீழே இருக்கும் போது) விமானம் கிழே விழுந்து விடும். “குறைந்த இதய துடிப்பு” எனலாம். அதே போல் 130 Knot (VFE – Velocity Flaps Extended Speed) வரை இருக்கும். அதன் அர்தம் 130 Knot வரைதான் பிளாப்ஸ் கீழே அல்லது வெளியில் இருக்கலாம். இது போல் ஒவ்வொரு நிறத்திற்கும் பல அர்த்தங்களும், பெயர்களும், சில வேகத்தை குறிக்கும் எண்களும் உண்டு. அதை முழுவதுமாக் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பச்சை நிறம்: 70-185 நாட், இது விமானம் ஓட்ட பாதுகாப்பான வேகம்.
3. மஞ்சள் நிறம்: 185-235 நாட் இது எச்சரிக்கையாக விமானம் ஓட்ட வேண்டிய வேகம்.
4. சிவப்பு கோடு 235: இதற்கு மேல் விமான பறந்தால் அதன் இறக்கைகள் பிய்த்து கொண்டு போய் விடும். (VNE – Velocity Never Exceed)
இந்த குறியீடுகள் ஒவ்வொரு விமானத்திற்கும் வேறுபடும். ஆனால் பெயர்கள் மாறுபடாது. எ.க.
VMCG, VST, V1, VR, VSO, VSO1, V3, V4, VLE, VFE, VRA, VNO, VNE …etc.. இதில் V என்பது Velocity அல்லது வேகம்.

Conversions between common units of speed
m/skm/hmphknotft/s
1 m/s =13.62.2369361.9438443.280840
1 km/h =0.27777810.6213710.5399570.911344
1 mph =0.447041.60934410.8689761.466667
1 knot =0.5144441.8521.15077911.687810
1 ft/s =0.30481.097280.6818180.5924841




Tuesday, July 19, 2011

வானூர்தியின் பாகங்களும், இயக்கமும்..





1. cabin & cockpit:: விமானிகள் உட்கார்ந்து இயக்கும் இடம்.
2. engine: உந்து விசையளிக்கும் எந்திரம்
3. wing: இறக்கைகள் இதில் இருந்துதான் மேலெ தூக்கும் விசை உற்பத்தியாகிறது.
4. horizontal stabilizer: இது விமானம் உருளாமல் இருக்க உதவுகிறது.



5. vertical stabilizer: இதுவும் விமானம் உருளாமல் இருக்க உதவும்.
6. rudder: இது விமானத்தை இடது அல்லது வலது பக்கம் திருப்ப உதவும்.
7. elevator: இது விமானத்தை மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் பயன்படும்.
8. flap: இது குறைந்த தூரம் ஒடுதளத்தில் ஒடி Take Off செய்ய உதவும்.


  
9. aileron: இதுவும் ரடரும் சேர்ந்துதான் விமானத்தை திருப்ப பயன்படும்.
10.spoilers:இது விமானத்தை தரையிறக்கும் போது விரைவாக வேகத்தை குறைக்க பயன்படும்.
11. Slats: இதுவும் flap இரண்டுமே குறை தூரம் ஓடி Take Off செய்ய பயன்படும்.
12. fuselage: இதுதான் விமானத்தின் உடம்பு.





Monday, July 18, 2011

செல்போனால் விமான விபத்துகள்.



சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 75 விமான விபத்துக்கள் செல்போனால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, யாரேனும் செல்போன் பேசினால், விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும், இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக மொபைல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான பைலட்டுகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும். இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்தில் பயணிக்கும் போது செல்போன்களை பயன்படுத்தினால் ஆபத்து  ஏற்படும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது செல்போன்களில் உள்ள  மைக்ரே (Micro) அலைகள் ‌பறக்கும் விமானத்தின் பேசினால் , விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய  செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் , கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.


Saturday, July 16, 2011

ஏரியன் ஸ்கவுட்





வானத்தில் பறந்த படியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கமெராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. 


சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது "ஏரியன் ஸ்கவுட்" எனப்படும் ரோபோ கமெரா. இதில் உள்ள தொடுதிறன் திரையின் மூலம் முதலில் கூகுள் நிறுவனத்தின் உலக வரைபட மென்பொருள் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். 

உதாரணமாக நியூயார்க் என்று தேர்வு செய்தால் ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கமெராவில் புகைப்படமாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். 
கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும். பதிவாகும் காட்சிகளை மின்னஞ்சலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக் கொண்டே இருக்கும். 
இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கமெரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.





Friday, July 15, 2011

சூரிய வானூர்தி.





சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.

200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. .இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியைக்கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது.




After seven years in the making, the Solar Impulse made its first real flight this morning from an airbase in Switzerland. The solar-powered plane got up to 5,500 ft in altitude and performed test maneuvers in order to see if the plane handled as well as simulations predicted. Everything went perfectly for the first test flight and proved that the plane is capable of taking off and landing. With this important test flight behind them, the Solar Impulse team can push on towards gearing up for their solar powered around-the-world flight in 2012.